Cleanup @ TWCM 2015 – Post Event Write Up

மராத்தான் ஓட்டப்பந்தயம் – 31/01/2016

மிக அருமையான திருவிழா இது…

திரு.பீட்டர் வான் கேட் வழியில் நாங்கள்
இவர் இல்லை என்றால் எதுவும் இல்லை!

பல ஆண் மற்றும் பெண்கள், குழந்தைகள், மாற்று திறனாளிகள்…. இன்னும் நிறைய வகை பங்கேற்பாளர்கள்….

நம் குழு சார்பாக ஓடிய நம் நண்பர்களான

1. செந்தமிழ்
2. பிரகாசு
3. மகேந்திரன்
4. ரவிக்குமார் சுவாமிநாதன்
5. கனேசு
6. கனேசு (க்யாக்சு)
7. ஏ.கே. குமார்

மற்றும் ஓடிய அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள்!!!!

நான் இங்கே எழுதுவது நம் பங்களிப்பு மற்றும் நம் மகிழ்ச்சியான தருணங்கள்…
பல நாள் முன்னால் இருந்து நாம் இதற்காக காத்திருந்தோம்,,,, நாம் ஒன்று கூடியது 30/01/2016 அன்று காலை 10 மணி அளவில்…. பீட்டர் சில அறிவுரைகள் மற்றும் வழிமுறைகள் பற்றி நமக்கு எடுத்து கூறினார், பின்னர் அவர்களது குழு தலைவர்களுடன் சிறு ஆலோசனை முடித்துவிட, நம் அடுத்த நிகழ்ச்சி நிரலை நோக்கி பயணப்பட முற்படும்போது என்ன நினைத்தாரோ பீட்டர் குப்பைகளை அகற்றுவதில் வல்லுனர்கள் நீங்கள், எனவே நீங்கள் தான் குப்பைகளை அகற்றுமாறு கூறினார்…..


சரி என்று ஒப்புக்கொண்டு விட்ட நாம் கால தாமதமாக திரைஅரங்கிற்கு சென்றோம் (நிபந்தனை சாமினில்)…..
மாலையில் நாம் மைதானத்திற்கு சென்று நம் வேலைகளையும் பதவிகளையும் முறையே தெரிந்து பின் அந்தி சாயும் வேளையில் சிற்றுண்டி மற்றும் சுவையான தேனீர் அருந்திநோம் (மருத்துவருக்கு நன்றி)..

மருத்துவர் எனக்கு மற்றும் ராசா அவர்களுக்கு சிகிச்சை அளித்து தான் ஒரு மருத்துவர் தான் என நிருபித்துவிட்டார்….
அரி பாபாவை செமையாக களாய்தோம்……
செல்பி புகைப்படம் எடுத்தோம்….
கத்தினோம்… களைந்தோம்…

இதற்கு நடுவில் நம் செந்தமிழ் செய்த அரும் பணியை பாராட்டியே தீர வேண்டும்….
இரவில் நீண்ட நேரம் இணையம் வாயிலாக பேசிவிட்டு உறங்கினோம்….
31/01/2015 காலை 2.30 மணிக்கு எழுந்து 3.00 மணிக்கு மீண்டும் மைதானத்திற்கு கிளம்பினேன்… நான் தாமதம் என்று உணர்ந்து மிக வேகமாக வண்டியை செலுத்த கட்டளை செய்தேன்….
ராசா முதல் நாள் இரவு கூறியது போல என் பொருளையும் கார்த்தி அவர் பொருளையும் எடுத்து கிளம்பி எங்கள் இடத்திற்கு பயணம் செய்தோம்….


செல்லும் வழியில் நம் குல சிங்கங்களை சந்தித்து விட்டு எதுவும் தேவை இருக்கிறதா என வினவி தேவை இருந்தால் அதை அவர்களுக்கு அளித்துவிட்டு சென்றோம்….
கலங்கரை விளக்கம் அருகில் ஒரு தேனீர்…..
அண்ணா சமாதி முன்பு நம் தோழர் சுந்தர் அவர்களுக்கு சீருடை அளித்துவிட்டு என் பிரிவுக்கு சென்றேன்…
மிக வேதனை பதிவு செய்தவர்கள் வரவில்லை….

நான் மற்றும் நம் சங்க உறுப்பினர் சாம் தீவிரமாக செயல் பட்டு எங்கள் இடத்தை தயார் செய்தோம்….
நேரம் சரியாக 5.45 ஆனது…..
வாடோய் வாடோய்,,,, வந்தாரு எங்கள் முதல் வாடிக்கையாளர்…. சிறப்பாக வழி அனுப்பி வைத்தோம்…

இன்னும் 30 மணித்துளி கழித்து ஒரு மாற்று திடமான திறனாளி வந்தார்,,,, ஒரு 40 பேர் அவரை சிறப்பாக வழியனுப்பி வைத்தோம்….
எழுமிச்சை தோல், வாழை பழம், நெகிழி பைகள், மற்றும் இதர குப்பைகளை அகற்றினோம்….

மணி 8.00, நம் 80 வயது மூதியவர் (வயதல் மட்டும்) திரு.இராசேந்திரன் அவர்களுடன் ஒரு புகைப்படம்…
8.15 மணிக்கு நம் சங்க உறுப்பினர் திரு.கணேசு வந்து கடலை மிட்டாய் கேட்டு இல்லை என்றவுடன் மீண்டும் இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தார்…
8.25 பசி…. காலை உணவு அனைவரும் உண்டோம்….
பிறகு இடத்தை சுத்தம் செய்து பிற உறுபினர்கள் சென்று விட்டார்கள்….
9.15 மணிக்கு நம் சன்சோவி ஆடி அசைந்து வந்து குப்பைகளை அகற்றி விட்டு ஆனைவரும் கிளம்பினோம்….
நேராக நாம் அடைந்த இடம் நம் சாம் இருந்த சான்தோம்…. அவருக்கு உதவி விட்டு மீண்டும் பயணம்…
மலர் மருத்துவமனை பாலம் மேலே நம் அசுவின்…..அனைவரும் குப்பை ஆகட்ராமல் கிளம்பி விட்னர்…
அவருடன் சேர்ந்து சரக்கு வண்டியில் குப்பை ஏற்றி விட்டு வண்டியை அனுப்பி விட்டோம்…

நானும் நம் அரியும் நம் சங்கேத சொல்லை உறக்க கத்திவிட்டு கிளம்ப தயார்…
திரும்பினால் முதிய வீரர் திரு. இராசேந்திரன் ஓடி வருகிறார்…
கூட நம் இளங்கோ…. அவருடன் நானும் ஓடி இலக்கை அடைந்தோம்…

நிறைய கூத்துகள் நடந்துது அங்கே….
என்னை விடுத்து மேடையில் புகைப்படம்…
நீருக்காக சண்டை (இங்கே மன்னிப்பு கேட்கிறேன்)….
குதூகலமான பேச்சு….
சிறு விவாதம்… செல்பி…. விழா முடியும் தருணம்…

மக்களே (நம்மை விமர்சிப்பவர்களை) எவர் இல்லை எங்களிடம்…
1. சிறந்த மருத்துவர்
2. மனித வள துறையில் வல்லவர்கள்
3. உலக வங்கி ஊழியர்
4.  சிறந்த பால் முகவர் 
5. மென் மட்டும் வன் பொருள் வல்லுனர்கள்
6. சிறந்த புகைப்பட கலைஞர்கள் 
7. சிறந்த நிகழ்ச்சி நிரல் அமைப்பாளர்கள்
8. கல்லூரி மாணவர்கள்
9. ஆங்கில எழுத்தாளர்கள் (அரி. நிவி அக்கா)
10. இணைய தல வல்லுனர்கள்….
இவர்கள் இல்லனா 17000 ஓட்ட பந்தைய வீரர்கள் விட்டு சென்ற குப்பைகள் மலை போல் இருந்திற்கும்…


17000 பேர் விட்டு சென்ற குப்பையை 14 பேர் செய்த வேலையால் சுத்தமானது…..
நாம் சிறந்த உழைப்பாளர்கள்…. மார்தட்டி கொள்வோம்…
நம்மை வர்ணிக்க மகா கவியோ புரட்சி கவியோ தேவை இல்லை…..

வெளியாட்கள் விமர்சனம் இல்லை என்றால் மட்டும் போதும்…
பல காத தூரம் கடந்து வந்து புரத்தை அழுக்காக்கி அகத்தை திடமாக்கி ஊரை சுத்தம் செய்யும் ஈட்டிகள்….
செம்மை படுத்தினால் பெரு மழையும், புயலும் எங்களிடம் மண்டியிடும்….
சிகரம் தொடும் சிங்கம் நாங்கள்…

நாடி மணி வைத்து கேளுங்கள் தியாகம் மட்டுமே ஒலிக்கும்….
எங்களை சீண்டி விமர்சித்தால் எங்கள் பனி மேலும் வளரும்…..
சுத்தமான சென்னையின் சாளரம் நாங்கள்….
இரசா
நம்பி
ரூபா
அகமது
சாம்
நிவி அக்கா
மல்லிகா
சன்சோவீ
முத்து குமார்
மோகன்
பார்த்திபன்
அசுவின்
அரி
சாய் ப்ரனய்
ச்ரி ராம்
செந்தமிழ்
பிரகாசு
நரெந்திரென்
கார்த்தி ரே
மகேந்திரன்
மோகன் தாசு
மற்றும் பலருக்காகவும்

எங்கள் தல, சுயமரியாதை செம்மல், சிறந்த பண்பாளர்

திரு.பீட்டர் வான் கேட்

அவர்களுக்காகவும் 

எழுதியது
உங்கள்,
கார்த்திகைச் செல்வன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 16 =